
சீனா பாகிஸ்தானுக்கு சமீபகாலமாக அணு உலைகளை வழங்கி வருகிறது. அது இந்தியத் துணைக் கண்டத்தில் தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்தும் என இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறது. பாகிஸ்தானுக்கு சீனா அணுஉலைகள் வழங்கும் விவகாரத்தில் இந்தியாவின் எதிர்ப்புக்கு வலு சேர்க்கும் விதமாக அமெரிக்காவும் இது விஷயத்தில் தனது கவலையினை தெரிவித்துள்ளது.
இதனிடையில் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் சீனாவுக்கு அலுவல் பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்தியா சீனாவுடனான இரு தரப்பு உறவுகளையும் மேம்படுத்த திட்டமிடப்படுள்ளது. அப்போது சீனா பாகிஸ்தானுக்கு அணு உலைகள் வழங்கும் விவகாரம் குறித்து இந்தியா தனது கவலையையும் கண்டனத்தையும் தெரிவிக்கும் என வெளியுறவுத் துறை வட்டரங்கள் தெரிவித்துள்ளன.
0 comments:
Post a Comment