
சென்னை: சென்னையிலிருந்து செல்ல இருந்த 5 உள்நாட்டு விமானங்கள் போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையிலிருந்து இன்று காலை கொச்சி, பெங்களூர், கொல்கத்தா செல்ல விமானங்கள் தயாராக இருந்தன. ஆனால், போதிய பயணிகள் வரவில்லை.
மேற்குவங்கம், கேரளம் மற்றும் கர்நாடகத்தில் இன்று பாரத் பந்த் முழு அளவில் இருப்பதால் அந்த மாநிலங்களுக்குச் செல்ல இருந்த பெரும்பாலான பயணிகள் பயணத்தை ஒத்தி வைத்துவிட்டனர்.
இதையடுத்து இந்த விமானங்கள் பகல் 1 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment