
ஸ்ரீநகர் : காஷ்மீரில் பிரிவினைவாதிகளின் தொடர் போராட்டங்களால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பதட்டம் நிறைந்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நேற்றும் நீட்டிக்கப்பட்டது. காஷ்மீரில் ஹூரியத் மாநாட்டு அமைப்பினர் கடந்த வாரம் நடத்திய போராட்டங்களில் வன்முறை தலைதூக்கியது. கலவரத்தை அடக்க பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இளைஞர்கள் சிலர் உயிரிழந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஹூரியத் மாநாட்டு அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர்.
காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்டிப்பதாகக் கூறி பிரிவினைவாதிகள், நேற்று ஸ்ரீநகர் ஈத்கா மைதானம் நோக்கி மாபெரும் ஊர்வலம் செல்ல பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர். இதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்ததால், ஸ்ரீநகரில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு நேற்றும் நீட்டிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment