
பெங்களுரிலும், அகமதாபாத்திலும் நடைபெற்ற குண்டு வெடிப்புகள் நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காவி பயங்கரவாத இயக்கங்களின் தீவிரவாத செயல்பாடுகளும், பகிரங்க மான ஆயுத புழக்கமும் அரசு இயந்திரங்களின் மௌனமும் பயங்கர வாதத்தை ஊட்டி வளர்த்திருக்கிறது.
இதனால் ஏற்பட்ட தீய விளைவுகள், இன்னொரு தரப்பிலிருந்து விரக்தி யாளர்களை உருவாக்கி, அவர்களில் சிலரை தீவிரவாதத்தின் பக்கம் நகர்த்தி விட்டிருக்கிறது.
இந்தியாவின் ராணுவ பலமும், தொழில் வளர்ச்சியும், கணிணி துறை யின் அசுர முன்னேற்றமும் பல நாடுகளை பொறாமை கொள்ள வைத் திருக்கிறது. அவர்களது தூண்டுதலிலும் பயங்கரவாதத்தின் கோரக்கரங்கள் நுழைந்திருக்கின்றன.
இதுதவிர, அமெரிக்காவில் செப்-11 தாக்குதலை நடத்தி அமெரிக்காவுக்கும், முஸ்லிம் உலகுக்கும் இடையில் மோதலை யூதர்களின் மொசாத் உளவுத்துறை உருவாக்கியது.
அதே குழுதான் இந்தியாவை முஸ்லிம் உலகிற்கு எதிராக திருப்பவும் இந்திய பெரும்பான்மை மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் இடையில் நிரந்தர பகையை உருவாக்கவும் திட்டமிட்டு பயங்கர நாசவேலையை அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது.
இதை நிரூபிக்கும் வகையில் மொசாத்தின் ஏஜெண்டுகளும், காவி இந்துத்துவ பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் நடத்தும் சந்திப்புகளும் திட்டமிடல் களும் இருக்கின்றன.
உளவுத்துறை பல்வேறு அமைப்பு களாக இயக்கப்படுகிறது. அவர்களுக் குள் ஒருங்கிணைப்பு இல்லை. 'ஈகோ' தலை விரித்தாடுகிறது.
இந்தியாவில் நடைபெறும் குண்டு வெடிப்புகள் குறித்து மர்மங்கள் நீடிக்கின்றன. ஆனால், குண்டு வெடித்த சில மணி நேரங்களில் சந்தேக விழிகள் முஸ்லிம்களையே சுற்றி வலம் வரத் தொடங்குகிறது.
இதனால் உண்மை குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர்.
துயரச் சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம், மீடியாக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக அவசரலிஅவசரமாக பலர் கைது செய்யப்படுகிறார்கள். வேகமாக தொடங்கும் விசாரணைகள் ஓரிரு மாதங்களில் இருட்டறைக்கு கொண்டு போகப் படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் பல குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன. அவற்றின் மீது தொடங்கப்பட்ட விசாரணைகள் என்னவாயிற்று? எத்தனைப் பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்? எத்தனைப் பேர் ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்? ஜாமீன் பெற்றவர்கள் எத்தனைப்பேர்? விசார ணைகளின் இன்றைய நிலை என்ன? விசாரணைகள் ஒரு சார்பாகலிகுறிப் பிட்ட இனத்தினை குறிவைத்து நடத்தப் படுகிறதா? வெளிநாட்டு உளவு அமைப்புகளின் தொடர்புகள் என்ன? சங்பரிவார் அமைப்புகள் விசாரிக்கப்பட் டனவா? என பல கேள்விகளுக்கு பதில் இல்லை.
இது குறித்து விரிவானலிவிரைவான வெள்ளை அறிக்கை நாடாளுமன்றத் தில் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
பயங்கரவாதத்தின் உண்மையான முகம் தோலுரிக்கப்படவேண்டும். உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப் படவேண்டும். எனவே மத்திய அரசு வெள்ளை அறிக்கையை சமர்ப்பிப்பதில் தயக்கம் காட்டக் கூடாது.
இது அடுத்தடுத்த பயங்கர சம்பவங் களை தடுக்க உதவும் என்பதை மறக்கக் கூடாது.
0 comments:
Post a Comment