ஈரான் மீண்டும் ஏவுகணை சோதனை
தெஹ்ரான் , திங்கள், 28 செப்டம்பர் 2009( 13:52 IST )
பல்வேறு உலக நாடுகளின் அழுத்தங்களுக்கு இடையேயும் குறுகிய தூர ஏவுகணைகளை நேற்று ஏவி பரிசோதித்துப் பார்த்த ஈரான், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று ஷஹாப் - 3 என்ற நீண்ட தூர ஏவுகணையை ஏவி பரிசோதித்துள்ளது.
ஈரான் அணு திட்டங்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிற நிலையில்,ஈரான் நேற்று ஃபதே 110 மற்றும் டோண்டார் 69 ஆகிய குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி பரிசோதித்துப் பார்த்ததாக தகவல் வெளியாயின.
உலக நாடுகளின் அழுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளை மீறி, இந்த சோதனையை மேற்கொண்ட ஈரான், அடுத்த அதிர்ச்சியாக இன்று ஷஹாப் - 3 என்ற நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை ஏவி பரிசோதித்தது.
சுமார் 1,300 முதல் 2,000 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கவல்ல இந்த ஏவுகணையை இஸ்ரேல், சில அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பா கண்டத்தில் உள்ள சில நாடுகளை குறிவைத்தே ஈரான் உருவாக்கி உள்ளதாக அந்நாட்டின் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment