பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளைக் கைது செய்க!-தி.க ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளைக் கைது செய்க!
காங்கிரஸ் அரசுக்குப் பொறுப்பிருக்கிறது
சென்னை ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் முழக்கம்

சென்னை, டிச. 3_ பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் தண்டிக்-கப் படவேண்டும். காங்கிரஸ் அரசிற்கு பொறுப்பிருக்கிறது என்று சென்னை ஆர்ப்பாட்டத்-தில் வலியுறுத்தப்பட்டது.

லிபரான் ஆணையப் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளபடி மத்தியில் உள்ள காங்கிரசு அரசு பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று ஆர்ப்பாட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் எழுச்சியுடன் நடந்தேறியது.

சென்னை அரசு பொதுமருத்துவமனை எதிரில் உள்ள மெமோரியல் ஹால் முன்பு இன்று [3 .12 .09 காலை 11 மணிக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம், ஆர்ப்பாட்டம்!

நீதிகேட்டு ஆர்ப்பாட்டம்!

பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய

குற்றவாளிகளை மத்திய அரசே கைது செய்

என்ற ஒலி முழக்கங்களை தோழர்கள் செ.ர.-பார்த்தசாரதி, கோ.வீ.-இராகவன் மற்றும் க. பார்வதி ஆகியோர் எழுச்சியுடன் முழங்கினர். தோழர்கள் அதைப் பின்பற்றி முழங்கினர்.

வீ.அன்புராஜ்

ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை எடுத்துக் கூறியும் திராவிடர் கழகத் தோழர்கள் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்-பாட்டத்தை எழுச்சியு-டன் நடத்தி வருவதையும், பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகள் தண்டிக்-கப்பட வேண்டும் என்-பதை வலியுறுத்தியும் திரா-விடர் கழகத் தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் உரை-யாற்றினார்.

கலி.பூங்குன்றன்

அடுத்து கழக பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் உரையாற்றி-னார். அவர் தனது உரையில் கூறியதாவது:

நரசிம்மராவ் பிரதம-ராக இருக்கும் பொழுது, காங்கிரஸ் அரசு மத்தி-யில் ஆட்சியில் இருக்கும் பொழுது, உத்தரப் பிர-தேசத்தில் அயோத்தியில் உள்ள 450 ஆண்டு கால பழமை கொண்ட பாபர் மசூதியை பா.ஜ.க., விசுவ இந்து பரிஷத், சங்பரிவார் கும்பல்கள் இடித்துத் தள்ளினர்.

பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் என்று வாஜ்பேயி, அத்-வானி, முரளி மனோகர்ஜோஷி, உமா பாரதி போன்றவர்கள் மீது லிபரான் கமிசன் அறிக்-கையில் மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தியாவிற்கே மாபெரும் தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டனர்.

லிபரான் ஆணையத்-தால் குற்றம் சாற்றப்பட்ட-வர்கள் எல்லாம் பொறுப்-பான பதவி வகித்தவர்-களாக இருந்தவர்கள். பிரதமர், துணைப் பிரத-மர், மத்திய அமைச்சர், முதலமைச்சர் போன்ற பொறுப்பான பதவியை வகித்தவர்கள்தான் முன்-னின்று பாபர் மசூதியை இடித்துள்ளனர். இது வெட்கக்கேடான செய்தி-யாகும்.

இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர் பாது காக்கப்படவேண்டும், மதச்சார்பற்ற தன்மை நிலை நாட்டப்பட-வேண்-டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முமுவதும் இன்று திராவிடர் கழகத்-தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

லிபரான் அறிக்கை எப்படி வெளியானது என்று நாடாளுமன்-றத்தில் பா.ஜ.க. ரகளை-யில் ஈடுபட்டு திசை திருப்புகின்றனர்.அதேபோல முன்னாள் முதல்வர் ஜெய-லலிதா பாபர் மசூதி இடிப்-புக்கு அதிமுக ஆட்களை அனுப்பிய இந்த அம்-மையார். பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்து-வதற்கு பதிலாக லிபரான் கமிசன் அறிக்கை எப்படி வெளியானது என்று கேள்வி கேட்டு இவர் ஒரு பக்கம் மதவெறி கும்பலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து திசை திருப்புகின்றார். வாஜ்-பேயி பாபர் மசூதி இடிப்-புக்கு முதல் நாள் மத-வெறியைத் தூண்டி இடிப்-புக்கு ஆதர-வாகப் பேசி-யுள்ளார்.

இனிப்பு வழங்கியவர்

பாபர் மசூதி இடிப்-பின்-போது அத்வானி-யிடம் சென்று பத்திரி-கையாளர்கள் பாதுகாப்பு கேட்டனர். அவரோ அவர்களுக்கே இனிப்பு வழங்கினார். இவைகள் எல்லாம் லிபரான் கமிச-னில் பதிவு செய்யப்-பட்டு இருக்கிறது.

பாபர் மசூதியை இடித்-த--வர்கள் யார் யார்? அந்த சம்பவம் எப்படி நடை-பெற்றது? என்று லிபரான் ஆணையத்திடம் வலுவான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்-பட்டுள்ளன.

காங்கிரஸ் அரசுக்கு பொறுப்பு

பாபர் மசூதி இடிக்கப்-பட்ட இடத்தில் புதிய மசூதி கட்டித்தரப்படும் என்று அன்றைய பிரதமர் நரசிம்மராவ் சொன்னார். இது வரை பாபர் மசூதி கட்டித் தரப்படவில்லை.

எனவே காங்கிரஸ் அரசுக்கு எல்லா வகை-யிலும் பொறுப்பு இருக்-கிறது. பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் அனை-வரும் தண்டிக்கப்-பட வேண்டும் என்பதே திராவிடர் கழகத்தின் நோக்கமாகும். இவ்வாறு பேசினார்.

கோ.சாமிதுரை

இறுதியில் ஆர்ப்பாட்-டத்திற்கு தலைமை வகித்த திராவிடர் கழகப் பொரு-ளாளர் வழக்கறிஞர் கோ.-சாமிதுரை கூறியதாவது:

தமிழகம் முழுவதும் பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று திராவிடர் கழகம் வலியுறுத்தி ஆர்ப்-பாட்-டம் நடத்துகிறது. லிப-ரான் ஆணைய அறிக்கை-யில் யார் யார் குற்றவா-ளிகள் என்ற பட்டியலும் வெளியிடப்-பட்டு உள்ளது. எனவே எங்களது போராட்-டம் இதோடு நின்று-விடாது. குற்றவாளிகள் தண்டிக்கப்-படும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

ஒலி முழக்கம்

பின்னர் தோழர்கள் அரை மணி நேரம் ஆர்ப்-பாட்டத்தை விளக்கி ஒலி முழக்கம் எழுப்பினர்.இரா. வில்வநாதன்,-செ.வை.ர. சிகாமணி, தி.வே.சு. திருருவள்ளுவர், தி.இரா. இரத்தினசாமி, கோ. அரங்கநாதன், டி.கே.நட-ராஜன், க. பார்வதி, சி. வெற்றிச்செல்வி பெங்க-ளூரூ சொர்ணா ரெங்க-நாதன், ஏ.பி.ஜே.மனோ-ரஞ்சிதம், திருமகள், மீனாட்சி,செல்வி இசை-இன்பன், பெரியார் மாணாக்கன், மு.நீ.சிவரா-சன், மு.ந. மதியழகன், நெய்வேலி இரா. கனகச-பாபதி, ஆவடி மா.ஆ.-கந்தசாமி, பா.தட்சிணா-மூர்த்தி, வழக்கறிஞர் கெ, கணேசன், கி. இராம-லிங்கம், மு.சென்னியப்பன், செங்கை பூபதி, ப.குமரன், தமிழ் சாக்ரடீஸ், செல்-வராஜ், பிரின்ஸ், உடுமலை வடிவேலு சி. செங்குட்-டுவன் ,பழனிச்செல்வம், ஆ.விசயரத்தினம், ப.க. குமரன், வ. இரவி, உதய-குமார், பெரியாரடியான், வினோத்குமார், காரைக்-குடி பிராட்லா கலைய-ரசன் உள்-ளிட்ட நூற்றுக்-கணக்கான தோழர்கள் இந்த ஆர்ப்-பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

நன்றி; விடுதலை
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: