பெரியார்தாசன் அவர்கள் விடியல் வெள்ளிக்கு கொடுத்த பேட்டி


நிருபர்:நீங்கள் சவுதி வந்த பின்னர்தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டீர்களா?

பெரியார்தாசன்: பிப்ரவரி 26 அன்று நான் சவுதி வந்தேன் ,9 மாதங்களுக்கு முன்பாக ரியாத் தமிழ் சங்கத்தில் சிறப்புரையாற்ற வந்தேன். இஸ்லாத்திற்க்கும் சவுதி பயணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது 10 வருடங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட முடிவு. 2000 வருடத்திலிருந்து நான் இஸ்லாத்தை ஆராய்ந்து வந்தேன். கம்பளிபூச்சி எவ்வாறு கூட்டுக்குள் இருக்கும் காலத்தில் முடியெல்லாம் உதிரிமோ, அதேபோல் என் அறியாமை வெளியே வந்தது.

என்னுடைய பெயர் ஷேசாத்திரி, என்னுடைய சிறு வயதில் நண்பர்கள் இருந்தார்கள், நாங்கள் சென்னை பெரம்புரில் உள்ள RCC பள்ளியில் படித்தோம். 1 முதல் 11 வரை படித்தோம். 1963 வருடம் முடித்தோம். இப்பொது ஒருவர் பிரபல பேச்சாளராக இப்போது இருக்கிறார், இன்னொருவர் இப்பொழுது கல்கி பகவானாக இருகிறார், சிராஜூத்தீன் என்ற நண்பர் இப்பொழுது அபுதாபியில் மார்க்க பேச்சாளராக இருகிறார்கள்.

இவர்களை சந்திப்பதற்க்கு எங்களுடைய பள்ளி ஆசிரியர் ஜனதனன் மூலம் 2000 வருடம் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆண்டு டிசம்பர் 31 அன்று துபாய் சென்றேன். அப்போது அபுதாபில் இருக்கும் சிராஜை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவன் என்னுடை சிறுவயது நண்பன் என்பதால் நாங்கள் வாடா போடா என்றுதான் பேசிக் கொண்டோம். இறுதில் விடைபெறும் போது அவன் கூறியது "எந்த குழந்தையும் இறை மறுப்பாளனாக பிறப்பதில்லை. எந்த மனிதனும் இறக்கும் போது இறை மறுப்பாளராக இருக்கக் கூடாது" என்று கூறியது என்னை ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்தியது. அடுத்தநாள் புத்தாண்டு கூட கொண்டாடவில்லை.

இறைவன் இருக்கிறானா அல்லது இல்லையா? நான் 45 வருடங்களாக இறைவன் இல்லை என்ற பிரச்சாரம் செய்தவன். இது 2000 வரை நடந்தது. இறைவன் இல்லாமல் இருந்தால் நல்லது என்று எண்ணினேன். ஏன் என்றால் நான் நாத்திக பிரச்சாரத்தின் மூலம் பல பேரை வழி கெடுத்து இருக்கிறேன்.

2000 முதல் நாத்திகத்தை நிறுத்தி விட்டு இறைவனை தேட ஆரம்பித்தேன். ஹிந்து வேதங்கள், இதிகாசங்கள், தேவாரம், புராணம், திருவாசகம் ஆகியவற்றை படித்தேன். இதில் நான் தேடிய விடைகள் கிடைக்க வில்லை. ஏற்கனவே எனக்கு தெரியும் ஏனென்றால் நான் 5 வயதிலிருந்தே நான் இவைகளை படித்து வந்து இருக்கிறேன். நான் அடிக்கடி சொல்வதுண்டு இந்து மரபுக்கும் இந்திய தத்துவ மரபுக்கும் எந்த தொடர்பும் இல்லை'. இந்து வேதத்தின் படி பிள்ளை குட்டியை பெற்றவன் கடவுளாக இருக்க முடியாது.

அடுத்ததாக 3 பரிசுத்த ஆவி, பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, நடுஏற்பாடு என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அடுத்து பவுத்தத்தில் நான் கேட்டேன், அதில் நான் கடவுளை பற்றி கேட்டதற்க்கு 'மரத்தில் உள்ள இலைகளை எல்லாம் பார்க்க முடியாது, கையில் உள்ள இலையை மட்டுமே பார்க்க வேண்டும்' என்று கூறினார்கள். அவர்களை சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, மார்க்கத்தை ஏற்பதைப் போல் ஆகாது.

2007 வரை நான் குர்ஆனையும், ஹதீஸ்களையும், முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாறு போன்றவற்றை நான் படித்தேன், அது என்னை பக்குவப்படுத்தியது. எனக்குள் ஒரு முழுமையான முடிவுக்கு வந்தேன் இறைவனுக்கு இணை வைக்ககூடாது. அந்த இறைவன் தான் ரஸு(ஸல்) அவர்களை இறுதி தூதராக அனுப்பி வைத்தான். அவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு தொழுகையில் தெரிய வேண்டும். ஒருவரையொருவர் பின்பற்றி ஒரு சமூகமாக தொழ வேண்டும் அது தொழுகை.

மேட்டை உடைத்து பள்ளத்தில் போட்டு காணாமல் போய்விட்ட செய்திகள் தெரியும் என்பதாலே ஜகாத் கொடுப்பதில் மூலம் வறுமையின் உயிரை நசுக்கி விட முடியும் என்பதாக நான் உணர்ந்தேன். அடுத்து நோன்பு எந்த துன்பம் வந்தாலும் இறைவனுக்காக தாங்கி கொள்ளுகிற 30 நாள் பயிற்சி என்பதாக நான் புரிந்து கொண்டேன். ஹஜ் என்பது ஒரே இலக்கை நோக்கி உலகமே வரவேண்டும் என்பதற்காக தான்.

இந்த திருக்குர்ஆன் இறக்கப்பட்டது. அதன் படி ரஸூ(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் அமையப் பெற்றது. அழகிய முன்மாதிரியாக இறக்கப்பட்ட திருக்குர்ஆனை மட்டும் நான் ஏன் தேர்வு செய்தேனென்றால் அதில் 300 வருடம் இல்லாதது இருக்கு. மற்றவற்றில் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்று உள்ளது. ஆனால் இது இறக்கப்பட்ட காலத்திலிருந்தே இன்றைக்கு வரைக்கும் மாற்றமில்லாமல் இருக்கிறது, என்பது ஒன்றே எனக்கு பெரிய சாட்சியாக உள்ளது.

அங்கே உலகத்தின் எல்லா தரப்பு மக்களும் பணக்காரன், ஏழை, படித்தவன், படிக்காதவன், அழகன், அழகில்லாதவன் ஆண், பெண் எந்தவொரு வேறுபாடும் இல்லாமல் அந்த இலக்கை நோக்கி வருகிறார்கள். ஊதியம் இல்லாத அவ்வளவு பெரிய வணக்கஸ்தலத்தை ஒன்று இறைவன் கட்டி இருக்க வேண்டும் இல்லையென்றால் ஒரு கேணப்பய கட்டி இருப்பான் ஏன்னா இவ்வளவு பேரை ஒரே இடத்தில் கூட்டி இருந்தால் எவ்வளவு வசூல் பண்ணி இருப்பார்கள்.

2007லிருந்து 2010 வரை மெல்ல மெல்ல இஸ்லாத்தின் பால் வந்தேன். 'துலுக்கன்கிட்ட பணம் வாங்கிவிட்டு இவன் பேசுறான்' என்று பல பேர் பேசுவார்கள், 2007 வருடம் ஆரம்பித்த இந்த தேடல் இறைவனுக்கும் எனக்கும் மட்டுமே தொடர்பை ஏற்படுத்திக் கொண்டேன். அறிவித்த சில மணி நேரங்களில் நான் மக்காவில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன், அதனால்தான் மக்காவில் வைத்து நான் முஸ்லிம் ஆனதை அறிவித்தேன். நான் இந்த முறை என்னுடை சொந்த செலவில் இங்கு வந்துள்ளேன்

நிருபர்: நண்பர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைக்க விரும்புகிறீர்களா?

பெரியார்தாசன்:நண்பர்கள் நம்மை அலட்சியப்படுதுவார்கள், அல்லது இலட்சியப் படுத்துவார்கள், நாம் முதலில் பழகும் போது நன்றாக பழகுவார்கள் பிறகு அலட்சியப்படுத்துவார்கள், அதனால் நான் நண்பர்களை இப்போது அழைக்கும் எண்ணம் எனக்கு இல்லை.

நிருபர்: குடும்பத்தில் வேரு யாராவது இஸ்லாத்தில் இணைந்துள்ளார்களா?

பெரியார்தாசன்:என் வீட்டில் மனைவியிடம் நான் இஸ்லாத்தை ஏற்ற விசயத்தை நான் கூறினேன் அதற்கு அவள் அதிர்ச்சி அடைந்தாள், பிறகு கூறினால் நீங்கள் எதற்கு வேண்டுமானாலும் மாறுவீர்கள் பவுத்தனா மாறுவீர்கள், முஸ்லிமா மாறுவீர்கள் அதற்காக நானும் மாறவேண்டுமா? என்று கேட்டாள், அதன் பிறகு நான் கூறினேன் நான் இஸ்லாத்தை ஏற்றதற்கு காரணம் இருக்கு. நீ ஒன்றை மனதில் வைத்துக் கொள் 'மறு உலக வாழக்கை என்ற ஒன்று உள்ளது அதை நம்பு' என்று சொல்லி விளக்கினேன் சிறிது நேரம் கழித்து அவளும் ஏற்றுக் கொண்டாள்.

நிருபர்:வீட்டில் வேருயாராவது இஸ்லாத்தில் இணைந்துள்ளார்களா?

பெரியார்தாசன்:பேரக்குழந்தைகள் நான் சொன்னால் கேட்பார்கள் அவர்களும் இஸ்லாத்தை ஏற்று கொண்டுள்ளார்கள்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: