சித்ரதுர்கா: கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா அருகே டீசல் டேங்கர் மீது பஸ் மோதி கவிழ்ந்து, தீப்பிடித்துக் கொண்டதில் 30 பேர் பலியாயினர்.
சித்ரதுர்காவில் இருந்து பெங்களூர் வந்த அரசு பஸ் சல்லனகேரி என்ற இடத்தில் நடுரோட்டில் இருந்த தடுப்பு மீது பயங்கர வேகத்தில் மோதி, எதிரே வந்த டீசல் டேங்கர் லாரி மோதி மோதியது.
இதில் பஸ் கவிழ்ந்து தீப் பிடித்துக் கொண்டது. டீசல் டேங்கரும் தீப் பிடித்துக் கொண்டது.
நள்ளிரவு 2.25 மணிக்கு நடந்த இந்த விபத்தில் 10 குழந்தைகள், பஸ்சின் டிரைவர் உள்பட 30 பேர் பலியாயியனர். மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பலியானவர்கள் குடும்பத்துக்கு மாநில அரசு ரூ. 1 லட்சம் நஷ்டஈடு அறிவித்துள்ளது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment