புதுடெல்லி:2002 ஆம் ஆண்டில் கோத்ரா ரயில் தீவைப்பு சம்பவத்தின் விசாரணையின் போதுதான் நார்கோ அனாலிசிஸ் என்ற அழைக்கப்படும் உண்மைக் கண்டறியும் சோதனை துவங்கப்பட்டது.
அன்றைய ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர் மூன்று மாதத்திற்குள்ளாக ஏழுபேரை நார்கோ பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள்.
தொடர்ந்து பல சிக்கலான விவாதத்திற்குரிய வழக்குகளில் நார்கோ சோதனைக்கு புலனாய்வு அதிகாரிகள் ஆர்வம் காட்டினர். பல வழக்குகளும் நார்கோ அனாலிசிஸ் சோதனைக்காக காத்திருக்கும் பொழுதுதான் சுப்ரீம் கோர்ட்டின் சட்டவிரோதம் என்ற உத்தரவு வெளிவந்துள்ளது.
ஏராளமான வழக்குகளில் நார்கோ அனாலிசிஸுக்கான சோதனையை நடத்துவது பெங்களூரிலிலுள்ள ஃபாரன்சிக் சயன்ஸ் லேபரேட்டரியாகும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஹரியானாவில் ருசிகா கொலைவழக்கு விசாரணையை பாதிக்கும் என்று கருதப்படுகிறது. 14 வயதான ருசிகாவை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் ஹரியானா போலீஸ் அதிகாரி எஸ்.பி.எஸ் ரத்தோர் நார்கோ சோதனைக்கு உடன்பட்டிருந்தார்.
சில மயக்க மருந்துகளின் உதவியுடன் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை தூக்கத்திற்கு சமமான சூழலுக்கு ஆட்படுத்தி அவர்களிடமிருந்து டாக்டர்களின் முன்னிலையில் விவரங்களை சேகரிக்கும் முறைதான் நார்கோ. இச்சூழலில் கிடைக்கும் தகவல்களை ஆடியோ, வீடியோ கேஸட்டுகளில் பதிவுச் செய்யப்படும்.
முத்திரைத்தாள் மோசடியில் அப்துல்கரீம் தெல்ஹியையும், அப்துல் வாஹிதையும் நார்கோ பரிசோதனைக்கு உட்படுத்தியிருந்தனர். நிதாரி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களும் நார்கோ பரிசோதனைக்கு ஆட்படுத்தப்பட்டனர்.
அபூசலீம் வழக்கு, ஆருஷி கொலைவழக்கு, மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு, அபயா கொலை வழக்கு, மும்பைத்தாக்குதல் வழக்கு ஆகியன நார்கோ அனாலிசிஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட முக்கிய வழக்குகளாகும்.
2000 ஆம் ஆண்டுமுதல் பெங்களூர் எஃப்.எஸ்.எல்லில் நார்கோ பரிசோதனைகள் நடந்து வருகின்றன. பல நாடுகளிலும் 1950 ஆம் ஆண்டுமுதல் கிரிமினல் வழக்குகளில் நார்கோ பரிசோதனைகள் நடந்து வருகின்றன.
பரிசோதனைகளின் நம்பகத்தன்மைதான் நார்கோ பரிசோதனைக்கு எதிரான முக்கிய விமர்சனம். நார்கோ பரிசோதனையின் நம்பகத் தன்மையை குறித்து ஃபாரன்சிக்-மனோஇயல் வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
நார்கோ பரிசோதனை முறை விஞ்ஞானப் பூர்வமானது அல்ல என்றும், மூன்றாம் தர விசாரணை முறை என்றும் தமிழ்நாடு ஃபாரன்சிக் சயின்ஸ் முன்னாள் தலைவர் டாக்டர் பி. சந்திரசேகரன் கூறியுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment