கொல்லம்:ஹிஜாப் அணிந்ததால் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேற்றப்பட்ட நபாலா என்ற 9-ஆம் வகுப்பு முஸ்லிம் மாணவியைத் தொடர்ந்து ஆலப்புழா கிறிஸ்தவ மிஷனரி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளிக்கூடத்தின் நிர்வாகிகள் மீண்டும் ஒரு முஸ்லிம் மாணவிக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கி பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
பூணப்புரா செண்ட் அலோசியஸ் பள்ளிக்கூடத்தில் பயின்ற மாணவி ஹாஜிராவை பள்ளிக்கூட நிர்வாகிகள் ஹிஜாப் அணிந்த காரணத்திற்காக பள்ளிக்கூடத்தை விட்டு நீக்கியுள்ளனர்.
ஒன்றாம் வகுப்பு முதல் செண்ட் அலோசியஸ் பள்ளிக்கூடத்தில் படித்து வந்த ஆஸியாவும் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது பள்ளிக்கூடத்தை விட்டு நீக்கப்பட்டுள்ளார். இவருடைய தந்தை தனது மகளின் படிப்பு நின்றுவிடக் கூடாது என்பதற்காக பள்ளிக்கூட தலைமையாசிரியர் சிஸ்டர் மேரி மாத்யூவை அணுகிய பொழுது மதத்துவேசமான முறையில் பேசியுள்ளார்.
மேலும் பள்ளிக்கூடத்தில் ஹிஜாப் அணிந்ததற்காக அனைத்து முஸ்லிம் மாணவிகளையும் வெளியேற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும் அது எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என அவர்கள் கூறியுள்ளனர்.
அதேவேளையில் கிறிஸ்தவ கன்னியாஸ்திரியான அந்த பள்ளிக்கூட தலைமயாசிரியை தலையில் அணிந்திருக்கும் கிறிஸ்தவ முறையிலான ஆடையைக் குறித்து கேட்டபொழுது இது எங்களுடைய பள்ளிக்கூடம் எங்கள் விருப்பப்படி ஆடை அணிவோம் என பதிலளித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
Home
Uncategories
ஹிஜாப்:நபாலாவுக்கு அடுத்து ஹாஜிரா,ஆசியா - தொடரும் கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்கூடங்களின் மதத்துவேஷம்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment