சீனாவில் 110 கோடி போன்கள்


பீஜிங்: சீனாவில் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 110 கோடியைத் தாண்டிவிட்டதாக அந்நாட்டு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது, சீனாவின் மொத்த மக்கள் தொகை, 130 கோடி. இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து மே மாதம் வரையிலும், புதிதாக நான்கு கோடியே 80 லட்சம் பேருக்கு போன் இணைப்புகள் வழங்கியுள்ளது அந்நாட்டு அரசு. இதையடுத்து, அந்நாட்டில் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 110 கோடியைத் தாண்டிவிட்டதாக அந்நாட்டு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.



சீன செய்தி நிறுவனமான ஜின் ஹூவா வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், "இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில், வீட்டிணைப்பு கொண்ட போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 78 லட்சம் குறைந்திருக்கிறது. "மொத்தம் 30 கோடி போன் இணைப்புகள் உள்ளன. ஆனால், மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 79 கோடியாக உயர்ந்துள்ளது. இக்காலகட்டத்தில் மொபைல் எண்ணிக்கை 4.85 கோடி அதிகரித்திருக்கிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவில் அகண்ட அலைவரிசை இணையதள சேவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 11 கோடியாக அதிகரித்துள்ளது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: