ஆதரவற்ற பெண்கள், மூதாட்டிகள் போதைக்கு அடிமையாகும் அவலம்

மேட்டூர்: மதுவின் போதைக்கு அடிமையாகும் ஆதரவற்ற பெண்கள், மூதாட்டிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களின் ஒன்று மேட்டூர். இங்குள்ள அணை, பூங்கா ஆகியவற்றை பார்வையிட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பலர் தங்களுடன் அழைத்து வரும் முதியோர், மனநோயால் பாதித்தவர்களை மேட்டூரில் விட்டு சென்று விடுகின்றனர். மனநோயால் பாதித்த முதியவர்கள், மூதாட்டிகள், ஆதரவற்றோர் ஏராளமானோர் மேட்டூரில் சுற்றி திரிகின்றனர்.



இவ்வாறு சுற்றி திரிபவர்கள் தங்களை ஆதரிக்கவும், அன்பு செலுத்த, பரிவாக கவனிக்க யாரும் இல்லாததால் குறுகிய காலத்தில் மதுவின் போதைக்கு அடிமையாகி விடுகின்றனர். போதைக்கு அடிமையாகும் ஆதரவற்றோர் பலர் இரக்க குணம் படைத்தவர்கள் தரும் பணம், காசுகளை சேமித்து, ஒரு குவார்ட்டர் வாங்கும் அளவிற்கு காசு சேர்ந்தவுடன் நேரடியாக டாஸ்மாக் கடைக்கு செல்கின்றனர். பகலிலேயே எதிர்பார்த்த பணம் சேர்ந்து விட்டதால் பகல் நேரத்திலேயே மது அருந்துகின்றனர். பின்னர் ரோட்டோரம் அல்லது பாழடைந்த கட்டிடத்தில் போதையில் சுயநினைவின்றி மயங்கி கிடக்கின்றனர். மேட்டூரில் போதைக்கு அடிமையாகும் ஆதரவற்ற மூதாட்டிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: