செவ்வாய், 29 ஜூன் 2010 19:26 இந்நேரம் Politics
1984 ஆம் ஆண்டு நிகழ்ந்த சீக்கியர் எதிர்ப்பு கலவரத்திற்காக பிரதமர் மன்மோகன் சிங் சீக்கியர்களிடம் மன்னிப்பு கோரினார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தமது கட்சி மன்னிப்பு கேட்டதாக குறிப்பிட்ட பிரதமர் அது வலி நிறைந்த ஒன்று என வர்ணித்தார். மேலும் குற்றவாளிகளை தப்பவிடமாட்டோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
உறவுகளை இழந்து வாடுபவர்களுக்கு நிவாரணம் ஒருபோதும் ஈடாகாது என்றும் தெரிவித்த அவர், காயங்களை மறந்து, காலங்களை கடந்து சீக்கிய சமூகம் முன்னேறும் என உணர்ச்சிப் பெருக்குடன் தெரிவித்தார்.
சீக்கியர்கள் குறிப்பிடத்தக்க அளவு வாழும் கனடாவில் பிரதமர் பேசிய பேச்சு முக்கியத்துவம் மிகுந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment