உத்தர பிரதேசத்தில் மத குருக்கள் மீது பெண்கள் தாக்குதல் நடத்தி உள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ நகரில் வசிக்கும் நாஸ் என்ற பெண்ணிற்கு மத குருக்கள் விவாகரத்து வழங்கியதே பிரச்சனைக்கு காரணம் ஆகும்.
தம்மை கலந்து ஆலோசிக்காமல் சுயமாகவே விவாகரத்து வழங்கியிருப்பதாக கூறி சகோதரியுடன் இணை மதக்குருக்களை நாஸ் செருப்பால் அடித்து உதைத்தார்.
கணவர் வீட்டாருக்கு ஆதரவாக மதக்குருக்கள் செயல்படுவதாக குற்றம்சாற்றியுள்ள நாஸ், மதக்குருக்களை அடித்து உதைத்ததால் தமது மனபாரம் குறைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் ஆன பிறகும் கூடுதல் வரதட்சணை கேட்டுக் கணவர் வீட்டார் மனரீதியாக துன்புறுத்தியதாகவும், மத குருக்களிடம் லஞ்சம் கொடுத்துவிட்டு விவாகரத்து பெற்று விட்டதாகவும் நாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாற்றை மறுத்துள்ள மத குருமார்கள், இது குறித்து விசாரித்து வருவதாக கூறியுள்ளனர்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment