மெக்சிக்கோவின் வடமேற்கு மாநிலத்தின் சினாலோ நகரச் சிறைச்சாலை கைதிகளுக்கிடையே நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மோதலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பொலிஸார் இருவரும் சிறைக்காவலர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களால் அடிக்கடி இச்சிறைச்சாலையில் மோதல்கள் ஏற்படுவதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் பாவனையாளர்களுக்கிடையே இதற்குமுன் ஏற்பட்ட மோதலின்போது 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 10 பொலிஸார் பலியாகியுள்ளனர்.
இச்சம்பவங்களுக்கு சீட்டா எனப்படும் போதைப்பொருள் அடிமையாளர்களின் குழுவே காரணம் என உள்நாட்டுச் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் பாவனை மெக்சிகோவில் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக பல்வேறு சமூகவியல் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment