பங்களாதேஷில் கல்வி பயில இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

பங்களாதேஷின் சிட்டக்கொங் நகரிலுள்ள சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகம் பங்களாதேஷின் முதற்தர பல்கலைக்கழகமாகும். இது 1995 இல் ஸ்தாபிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தில் கணிசமான வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். சிட்ட கொன் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகம் இலங்கை மாணவர்கள் குர்ஆனிய அறிவியல், இஸ்லாமியக் கற் கைகள், த/வா இஸ்லாமியக் கற்கைகள், கணினி விஞ்ஞானம், பொருளியல், கண னித் தொடர்பாடல், பொருளியல்

மின்னியல், மின்பொறியியல், பாமஸி, ஆங்கில மொழியும் இலக்கியமும், சட்டம் ஆகிய துறைகளில் கற்பதற்கு புலமைப்பரிசில்களை வழங்கவுள்ளது.

கல்விப் பொதுதத்தராதர உயர்தரப் பரீட்சையில் 2008-2009 கல்வியாண்டில் குறைந்தது மூன்று திறமைச் சித்திகளைப் பெற்றவர்கள் இப் புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்கலாம்.

பாமஸி, கணினி விஞ்ஞானப் பொறி யியல் ஆகிய துறைகளுக்கான புலமைப் பரிசிலை எதிர்பார்க்கும்

மாணவர்கள் பௌதீகவியல் கணித பாடங்களில் பின்னணி அறிவை அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றி டமிருந்து கணினி டிப்ளோமா பாட நெறியை பூத்தி செய்தவராக இருக்க வேண்டும்.

ஷரீஆத் துறை தவிர்ந்த ஏனைய அனைத்து பீட மாணவர்களுக்கும் 100 அமெரிக்க டொலர்கள் மாதாந்தம் புலமைப்பரிசிலாக வழங்கப்படும். இது அவர்களுடைய கற்கைநெறிக் கட்டணத்தையும் ஏனைய கல்விச் செலவினையும் பூர்த்தி செய்யும். உணவு, தங்குமிட வசதிகளை மாணவர்களே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.

ஷரீஆத் துறை மாணவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 100 அமெரிக்க டொலர் தனது வாழ்க்கைச் செலவி னத்திற்கும் கற்கைநெறிக் கட்டண த்திற்கும் போதுமாக அமையும்.

கற்கைநெறிக் காலம்: ஒவ்வொரு கற்கைநெறிக் காலமும் நான்கு வருடங் களை உள்ளடக்கியது.

விண்ணப்பப்படிவம்: 50 ரூபாய் பணத்தைச் செலுத்தி வாமி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 01.07.2010 (வியாழக்கிழமை)

நேர்முகப் பரீட்சை: கொழும்பிலுள்ள வாமி அலுவலகத்தில் 03.07.2010 (சனிக் கிழமை) நடைபெறும். மேலதிக விபரங்களுக்கு எம்.இஸட். எம். ஷாபி 0114 928 022 இலக்கத்தைத் தொடர்பு கொள்ளவும்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: