இஸ்லாமாபாத், ஜூன் 17: தலிபான் தீவிரவாதிகளின் பிடியில் 35 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
÷பாகிஸ்தானிலுள்ள பழங்குடியினப் பகுதிகளில் பதுங்கியுள்ள தலிபான் தீவிரவாதிகள், பயங்கரவாதிகளை ஒழிக்கும் நோக்கத்துடன் அந்த நாட்டின் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மொஹ்மான்ட், பஜாவூர் பழங்குடியினப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது ஆப்கன் தலிபான்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
கடந்த திங்கள்கிழமை இந்தத் தாக்குதலை ஆப்கன் தலிபான்கள் நடத்தினர். அப்போது சோதனைச் சாவடிகளில் 40 ராணுவ வீரர்கள் இருந்தனர்.
÷தாக்குதலுக்குப் பின்னர் 40 ராணுவ வீரர்களையும் தலிபான்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றுள்ளனர்.
÷இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மாகாணம் ஜலாலாபாதிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் 5 ராணுவ வீரர்களை மட்டும் தலிபான்கள் ஒப்படைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.÷மீதமுள்ள 35 ராணுவ வீரர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ தலைமை செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அத்தர் அப்பாஸ் வியாழக்கிழமை கூறியதாவது:
÷பாகிஸ்தான் ராணுவ சோதனைச் சாவடிகள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியது உண்மைதான்.
இங்கிருந்த 40 ராணுவ வீரர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.
அவர்களைத் தேடும் முயற்சியில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுள்ளது என்றார் அவர்.
÷இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் 35 வீரர்களையும் தலிபான்கள் தங்கள் பிடியில் வைத்திருக்கின்றனர் என்று தலிபான் வட்டாரங்கள்
தெரிவித்ததாக பிபிசி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment