இஸ்லாமாபாத், ஜூன் 17: நம்பிக்கை தரும் நடவடிக்கைகளை இந்தியா துவங்கவேண்டும் என்று விரைவில் இரு நாடுகளுக்கும் இடையே தொடங்க உள்ள வெளியுறவுச் செயலர்கள் நிலை பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் வலியுறுத்த உள்ளது.
÷2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை இந்தியா துண்டித்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் மீண்டும் பேச்சுவார்த்தை பாகிஸ்தானுடன் இந்தியா துவங்கியது. வெளியுறவுத் துறை செயலர்கள் நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
சில வாரங்களுக்குப் பிறகு வெளியுறவுத் துறை செயலர்கள் மீண்டும் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் ஜூன் 24-ம் தேதி இந்திய, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலர்கள் மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அப்போது நம்பிக்கை தரும் நடவடிக்கைகளை இந்தியா துவங்கவேண்டும் என்று பாகிஸ்தான் தரப்பில் கோரிக்கை வைக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த பேச்சுவார்த்தையின்போது காஷ்மீர் பிரச்னை, பிடித்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளை விடுவித்தல், மீனவர் பிரச்னை, பயங்கரவாதம், வர்த்தகம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விஷயங்களில் இரு நாடுகளும் நம்பிக்கை தரும் நடவடிக்கையை துவங்கினால், அது பல்வேறு பலன்களை இரு நாடுகளுக்கும் அளிக்கும் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும் ஜம்மு-காஷ்மீரிலிருந்து ராணுவப் படைகளை வாபஸ் வாங்குமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை வைக்கும் என்று தெரிகிறது.
அதேபோல அங்கு கைது செய்யப்பட்டுள்ள அரசியல் விவகாரம் தொடர்பான கைதிகளையும் விடுவிக்குமாறு பாகிஸ்தான் கோரிக்கை வைக்கும் என்று தெரியவந்துள்ளது.÷பிரச்னை உள்ள பகுதிகளில் பதற்றத்தைக் குறைத்து, அதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்தவும் பாகிஸ்தான் விரும்புவதாகத் தெரியவந்துள்ளது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment