திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் சிறையிலிருந்து பெருமளவிலான வெடிபொருட்கள், கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 1,500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஏராளமான கைதிகள் இச் சிறையில் உள்ளனர். இதை சிபிஎம் சிறைச்சாலை என்று கூறும் அளவுக்கு, பல ஆண்டுகளாக இங்கு லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கைதிகளின் ஆதிக்கத்தில் உள்ளது. தனியாக சமைப்பது, கஞ்சா, செல்போன் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவது என கைதிகள் சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கைதிகளுக்கு பயந்து இங்கு சோதனை நடத்தப்படுவதில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இங்கிருந்து 2 கைதிகள் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து சிறைத்துறை கூடுதல் டிஜிபி அலெக்சாண்டர் ஜேக்கப் உத்தரவின் பேரில் சிறைத்துறை வடக்கு மண்டல டிஐஜி ஜோசப் தாமஸ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முன்தினம் மாலை கண்ணூர் சிறையில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் 6 செல்போன்கள், 27 சார்ஜர்கள், ஏராளமான கத்திகள், இரும்பு கம்பிகள், வெடிமருந்து, பிரவுன் சுகர், கஞ்சா உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதுகுறித்து டிஐஜி அலெக்சாண்டர் ஜேக்கப் கூறுகையில், கண்ணூர் சிறையில் நடந்த சோதனையில் 4 லாரிகளில் ஏற்றக்கூடிய அளவுக்கு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இனிமேல் இங்கு அடிக்கடி சோதனை நடத்தப்படும் என்றார்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment