
பாலசோர்: ஒரிசா மாநிலம் சந்திப்பூரில், பிரித்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது.
இந்த ஏவுகணை 350 கிலோமீட்டர் தொலைவு சென்று தாக்கக் கூடிய வல்லமை படைத்தது. அணு ஆயுதங்களையும் ஏந்திச் செல்லும் திறன் படைத்தது.
நடமாடும் லாஞ்சர் மூலம் இந்த ஏவுகணை ஏவி பரிசோதிக்கப்பட்டது. இதுகுறித்து சந்திப்பூர் ஏவுதள இயக்குநர் தாஷ் கூறுகையில்,இந்த சோதனையை ராணுவம் நடத்திப் பாரத்தது. சோதனை நல்லபடியாக நடந்தது என்றார்.
பிரித்வி-2 ஏவுகணையில் 500 கிலோ எடை கொண்ட ஆயுதங்களை அனுப்பி ஏவ முடியும்.
தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கக் கூடிய இந்த ஏவுகணை ஏற்கனவே இந்திய பாதுகாப்புப் படையில் சேர்க்கப்பட்டு விட்டது. இருப்பினும் அவ்வப்போது இது ஏவி பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட முதல் பாலிஸ்டிக் ஏவுகணை பிரித்வி என்பது குறிப்பிடத்தக்கது. இரட்டை என்ஜின்களுடன், திரவ எரிபொருளில் இது செயல்படுகிறது.
0 comments:
Post a Comment