சென்னையில் 6 வயது சிறுமி கொலை: ஏரியில் பிணம்-காவலாளி கைது

சென்னை: சென்னை கொரட்டூரில் 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற காவலாளி கைது செய்யப்பட்டுள்ளான்.

கொரட்டூர் சேது பாஸ்கரா நகர் மாதனால் குப்பத்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இங்கு திண்டிவனத்தை சேர்ந்த எத்திராஜ் (40) காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவர் தனது மனைவி செல்வி, மகள் கெளரி (6) ஆகியோருடன் கட்டிடம் கட்டும் இடத்திலேயே குடிசை போட்டு தங்கியுள்ளார்.

இந் நிலையில் கடந்த 19ம் தேதி இரவு கெளரி காணாமல் போனாள். இது குறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந் நிலையில் கொரட்டூர் ஏரியில் கெளரியின் பிணம் அழுகிய நிலையி்ல் மிதந்தது. சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தன. 2 கைகளையும் நாய்கள் குதறியிருந்தன.

சிறுமியின் பிணம் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் கெளரி கழுத்து நெரிக்கப்பட்டும், பலாத்காரம் செய்யப்பட்டும் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து இதுகுறித்து விரைந்து விசாரிக்க புறநகர் கமிஷனர் ஜாங்கிட் அம்பத்தூர் உதவி கமிஷனர் குமாரவேலுக்கு உத்தரவிட்டார்.

விசாரணையில் இதற்கு முன் குழந்தைகள் காப்பகத்தில் காவலாளியாக வேலை பார்த்த ஜெயராமன் (40) என்பவர் தான் சிறுமி கெளரியை கொலை செய்தது தெரிய வந்தது.

இதையறிந்த ஜெயராமன் தலைமறைவாகிவிட்டார். போலீசார் தனிப்படை அமைத்து ஜெயராமனை கைது செய்தனர்.

அவன் அளித்த வாக்குமூலத்தில்,

குழந்தைகள் காப்பக கட்டிடத்தில் இதற்கு முன்பு நான்தான் காவலாளியாக வேலை பார்த்தேன். தினமும் குடித்து விட்டு வந்ததால் மேஸ்திரி அண்ணாத்துரை என் மீது கட்டிட என்ஜினீயர் மோகனிடம் புகார் கூறினார்.

இதனால் அவர் என்னை வேலையைவிட்டு நீக்கிவிட்டு அண்ணாத்துரையின் உறவினரான எத்திராஜை வேலைக்கு சேர்த்தார்.

இதனால் அண்ணாத்துரை மீது ஆத்திரம் ஏற்பட்டது. பழிவாங்க திட்டம் போட்டேன். 19ம் தேதி இரவு எத்திராஜ் குடும்பத்துடன் குடிசைக்கு வெளியே தூங்கி கொண்டிருந்தார். அப்போது கெளரியின் வாயை பொத்தி தூக்கி வந்தேன்.

அவளை பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலை செய்து ஏரியில் உடலை வீசினேன்.

என் மேல் சந்தேகம் வராமல் இருப்பதற்காக எத்திராஜ் வீடு அருகே உள்ள என் 2வது மனைவி வீட்டிலேயே தங்கினேன். கெளரியின் பிணம் கிடைத்ததும் என் மீது போலீசாருக்கு சந்தேகம் வருவதை அறிந்ததும் தலைமறைவானேன் என்று கூறியுள்ளான்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: