
டெல்லி: சென்னை உள்பட இந்தியாவின் 7 நகரங்களில் ஒலி மாசுவைக் கண்காணிக்கும் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
இதுதொடர்பான பணிகளை மத்திய மாசுக் கட்டுப்பாட்டுக் கழகம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி தொடக்கமாக மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், லக்னோ ஆகிய நகரங்களில் தலா ஐந்கது கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
ரியல் டைம் ஆம்பியன்ட் நாய்ஸ் மானிட்டரிங் என்ற இந்த கட்டமைப்பின் மூலம் ஒலி மாசுவி்ன் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும்.
டெல்லியில் அக்டோபர் 12ம் தேதி இந்த கட்டமைப்பு வசதி முதலில் தொடங்கி வைக்கப்படுகிறது. பிற நகரங்களில் படிப்படியாக தொடங்கப்படும்.
0 comments:
Post a Comment