மக்காவில் திறந்து வைக்கப்படவுள்ள குர்ஆன் பொருட்காட்சியகம்

சர்வதேச குழு: மக்காவிலுள்ள உம்முல் குரா பல்கலைக்கழகம், குர்ஆனிய பொருட்காட்சியகமொன்றை நிறுவத் திட்டமிட்டுள்ளதாக உகாஸ் தினசரி தெரிவிக்கின்றது.
உம்முல் குரா பல்கலைக்கழக அதிகாரி புவாஸ் அல் டஹாஸ் தெரிவிக்கும் போது, புனித அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள மரங்கள் அடங்கிய தோட்டமொன்றையும் உள்ளடக்கியதாக இப்பொருட்காட்சியகம் அமையும் என்றார்.

புனித நகரின் அல்அபாதியா மாவட்டத்தில் இது நிறுவப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இச்செயற்றிட்டத்தை மேற்பார்வை செய்வதற்காக, பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய வரலாறு மற்றும் நாகரிக திணைக்களத்தினால் நிருவாகக் குழுவொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அவர் இங்கு சுட்டிக் காட்டினார்.

இஸ்லாத்தின் ஆரம்பம் தொடக்கம் இற்றை வரையான மக்காவின் தோற்றங்கள், எழுத்துப் பிரதிகள், நாயணங்கள், மட்பாண்டங்கள், கைவேலைப்பாடுகள் மற்றும் வரலாற்று ரீதியானதும் எழுத்தியல் ரீதியானதுமான ஏனைய ஆக்கங்களையும் இப்பொருட்காட்சியகம் உள்ளடக்கியிருக்கும்.

புனித அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள பூக்களை உள்ளடக்கிய முதலாவது குர்ஆனியத் தோட்டம், கட்டாரின் மோஹாவில், 2008ம் ஆண்டு நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: