சர்வதேச குழு: புரூனையிலுள்ள மராபுரங் சிறைச்சாலையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களினால் புனித அல்குர்ஆன் ஓதல் நிகழ்வு நிறைவு செய்வதையொட்டிய வைபவமொன்று நேற்று இடம்பெற்றது.
காலையிலும் நாளாந்தமும், தமது ஏனைய பொறுப்புகளை ஆரம்பிக்கும் போதும் சிறைச்சாலை ஊழியர்கள் புனித அல்குர்ஆனை ஓதி வருகின்றனர்.
மராபுரங் சிறைச்சாலையின் நிறுவனத் தலைவர், பிரதிப் பொறுப்பாளர்கள், பகுதித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் ஆகியோர் இதில் பிரசன்னமாகியிருந்தனர். மராபுரங் சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி சுப்ட் ஹஜ் சைனல் பின் ஹஜ் இஸ்மாயிலும் இதன் போது பிரசன்னமாகியிருந்தார்.
சூரா பாத்திஹாவுடன் ஆரம்பமான வைபவத்தில், ஆன்மீக விருத்தியின் வளத்தை மேம்படுத்துவதற்கான வழிகாட்டல் கருத்துக்கள் பலவும் முன்வைக்கப்பட்டன. புனித அல்குர்ஆன் ஓதல், வருடாந்தம் சிறப்பிக்கப்பட்டு வருகின்ற ஒரு நிகழ்வாகும்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment