லாஸ் ஏன்ஜல்ஸ்: லாஸ் ஏன்ஜல்ஸ் சர்வதேச விமான நிலையத்தின் ஒரு டர்மினல் போலி வதந்தியால் காலிசெய்யப்பட்டது.
லாஸ் ஏஞ்செலஸ் சர்வதேச விமான நிலையத்தின் டாம் பிராட்லி சர்வதேச முனையத்திற்கு நேற்று மாலை 5 மணியளவில் வந்த ஒரு நபர், மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.
இதையடுத்து அந்த டெர்மினல் மூடப்பட்டது. அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்னர். பின்னர் பாதுகாப்புப் படையினர் டெர்மனில் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் மிரட்டலுக்குரிய வகையில் எதுவும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து விமான நிலைய செய்தித் தொடர்பாளர் ஆல்பர்ட் ரோட்ரிகஸ் கூறுகையில், இந்த வதந்தியால் பெரிய அளவில் பாதிப்பில்லை. சில விமானங்கள் மட்டுமே காலதாமதமாக சென்றதாக தெரிவித்தார்.
அரை மணி நேர குழப்பத்துக்குப் பின்னர் டெர்மினல் மீண்டும் திறக்கப்பட்டது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment