மும்பை தாக்குதல் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் கூட்டாக விசாரணை செய்ய இருப்பதாக இரு நாடுகளும் அறிவித்துள்ளன. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற சார்க் உச்சி மாநாட்டில் இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரமும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கும் சந்தித்து பேசிய பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயும் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பும் இணைந்து இந்த விசாரணையை மேற்கொள்ள இருக்கின்றன. இந்திய - பாகிஸ்தான் உளவுத்துறை தலைவர்களின் ஆலோசனைகளும் நடைபெற்றன.
இந்தியாவின் உளவுத்துறை தலைவர் ராஜீவ் மாத்தூர், பாகிஸ்தான் உளவுத்துறை தலைவர் ஜாவித் நூர் ஆகியோர் மேற்கொண்ட ஆலோசனைகள் பயனுள்ள வகையில் அமைந்ததாக இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு பணிந்து பாகிஸ்தான் உடனான பேச்சு வார்த்தைக்கு இந்தியா உடன்பட்டது என பாஜக கடுமையாக குற்றம் சாற்றியுள்ளது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment