இந்தியாவும் பாகிஸ்தானும் கோப்புகளை பரிமாறிக்கொள்வதற்குப் பதிலாக, இதயங்களை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார்.
மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த வருகிறது.ஆனால் இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தயக்கம் காட்டி வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று இஸ்லாமாபாத் வருகிறார்.
ப.சிதம்பரம் இன்று பாகிஸ்தான் வந்து சேர்ந்ததுமே அந்நாட்டு உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கை சந்தித்துப் பேச உள்ளார்.
அப்போது, மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான சயீத்துக்கு எதிராக தாமதிக்காமல் கடும் நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், சயீத் விடயத்தில் சிதம்பரம் திருப்தி அடையும் விதமான பதிலை தாம் அளிக்க உள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் இன்று இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இருநாடுகளும் பரஸ்பரம் ஆவண கோப்புகளை பரிமாறிக்கொள்வதற்கு பதிலாக, இதயங்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றார்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment