கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் அறையை வழக்கறிஞர்கள் சூறையாடி உள்ளது நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஒரு அறையை உதவி அலுவலர்களுக்காக தலைமை நீதிபதி மொகித் சாந்திலால் ஷா ஒதுக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 70 வழக்கறிஞர்கள் அந்த அறையை ஆக்கிரமித்தனர்.
இதை அறிந்த தலைமை நீதிபதி, காவல்துறையினர் மூலம் வழக்கறிஞர்களை அந்த அறையில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார். அப்போது காவல்துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு அந்த அறையில் இருந்து வழக்கறிஞர்கள் வெளியேற்றப்பட்டனர்.
தலைமை நீதிபதியின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வழக்கறிஞர்கள் கூட்டமாக தலைமை நீதிபதியின் தனி அறைக்கு சென்று மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். மேஜை மீது இருந்த தஸ்தாவேஜூகளை தூக்கி எறிந்து, நீதிபதியே கொல்கத்தாவை விட்டு வெளியேறு என்று கோஷம் போட்டனர்.
மேலும் தலைமை நீதிபதியை கண்டித்தும், அவரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரியும் மாநிலம் முழுவதும் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தமும் செய்தனர். இதனால் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் தலைமை நீதிபதியை மும்பை நீதிமன்றத்திற்கு மாறுதல் செய்து உத்தரவு வந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் பிறப்பித்த இடமாறுதல் உத்தரவு நேற்றுதான் கொல்கத்தாவுக்கு வந்து சேர்ந்தது.
இதைத்தொடர்ந்து அவசரம் அவசரமாக தலைமை நீதிபதிக்கு வழியனுப்பு விழா நடந்தது. ஆனால் வழக்கறிஞர்களில் பெரும்பாலோர் இதில் கலந்துகொள்ளாமல் அவருக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment