பெய்ஜிங், ஜூன் 17: பாகிஸ்தானுக்காக அணுஉலை தயாரித்துத் தர சீனா முன்வந்துள்ளது. பாகிஸ்தானுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சீனா கூறியுள்ளது.
÷பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி பர்வேஸ் கயானி தலைமையிலான அந்நாட்டு உயர் அதிகாரிகள் குழுவினர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். கயானி, சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் லியாங் கயாங்லிக்கை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து சீன அதிகாரிகள் கூறியது: சீனா - பாகிஸ்தான் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு சிறப்பாகவுள்ளது. அணுசக்தித் துறையில் பாகிஸ்தானுக்கு சீனா உதவ முன்வந்துள்ளது. பாகிஸ்தானுக்கு இரண்டு அணுஉலைகளை சீனா தயாரித்து வழங்கும் என்றனர்.
÷பாகிஸ்தானுடனான ராணுவ உறவு எதிர்காலத்தில் மேலும் வலுப்படும். பாதுகாப்பு விஷயங்களில் ஒத்துழைப்பு தர பாகிஸ்தான் முன்வந்துள்ளது. இரு தரப்பும் இணைந்து நவீன போர் விமானங்களைத் தயாரிக்கும் என்று சீன அமைச்சர் லியாங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment