கொல்லம், ஜூன் 17: பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் சதிச் செயலால் குற்றவாளியானதாக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கில் முன் ஜாமீன் கேட்டு பெங்களூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை, மனு தாக்கல் செய்தபோது செய்தியாளர்களிடம் இதனை மதானி கூறினார்.
÷கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 10 ஆண்டுகள் சிறையில் கழித்த பிறகு நான் குற்றவாளி இல்லை என்று கூறி நீதிமன்றம் விடுவித்தது. இதுபோலவே பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கிலும் குற்றவாளியாக்க முயற்சி நடக்கிறது என்று மதானி மேலும் கூறியுள்ளார். கட்சியின் தொண்டர்களை அமைதிக் காக்கும் படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 2008 ஜூலையில் பெங்களூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். இதில் மதானி மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment