என்.ஆர்.ஐ. என்று அழைக்கப்படும் அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு விரைவில் வாக்குரிமை வழங்கும் வரைவு மசோதா ஒன்றை மத்திய அமைச்சர்கள் குழு முன்மொழிந்துள்ளது. எனவே மத்திய அமைச்சரவை இதனை விரைவில் பரிசீலிக்கலாம் என்று தெரிகிறது.
அயல்நாட்டு விவகார அமைச்சகம் 4 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய இந்த வரைவு மசோதாவை பாதுகாப்பு அமைச்சர் ஏ.ஏ.அந்தோனி தலைமை மத்திய அமைச்சரவை குழு இன்று சட்ட மசோதாவிற்காக மத்திய அமைச்சரவை பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது. மத்திய அரசு இந்த மசோதாவை 2006ஆம் ஆண்டு ராஜ்ய சபாவிற்கும் பின்பு நாடாளுமன்ற நிலைக்குழுவின் பார்வைக்கும் அனுப்பப்பட்டு கடசியாக அமைச்சர்கள் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போதைய விதிமுறைகளின் படி தொடர்ந்து 6 மாதங்களுக்கு இந்தியாவை விட்டு வெளி நாட்டிலிருந்தால் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும். தற்போது இந்த விதிமுறை மாற்றப்படவுள்ளது. ஆனாலும் அயல்நாட்டிலிருந்தபடியே வாக்களிக்க அனுமதி இல்லை. தேர்தல் நாளில் அவர் இந்தியாவில் அவரது தொகுதியில் இருக்கவேண்டும் என்பது அவசியம்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment