காபூல்:தாக்குதல் மிரட்டலைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் டேவிட் காமரூன் காந்தஹார் ராணுவ முகாமிற்கு செல்லும் திட்டத்தை ரத்துச் செய்தார். ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற உளவுத்துறையின் தகவலைத் தொடர்ந்துதான் காமரூன் இப்பயணத்தை ரத்துச் செய்தார்.
பிரதமராக பதவியேற்ற பின்னர் காமரூன் முதன்முதலாக ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் செய்தார்.ஹெல்மந்தில் ஷஹ்ஷாதிலிருந்து காந்தஹாருக்கு செல்வதற்காக சினுக் ஹெலிகாப்டரில் காமரூன் ஏறிய உடன் ஹெலிகாப்டரை சுட்டுவீழ்த்த தாலிபான் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவலை அளித்தது.
ஹெலிகாப்டரில் வி.ஐ.பி ஒருவர் பயணிப்பதாகவும், தாக்குதலுக்கு தயாராகுமாறும் கூறும் தகவலை ரேடியோ வழியாக ரகசியமாக ஒட்டுக்கேட்டது உளவுத்துறை.அதிகாரிகள் இத்தகவலை ஒட்டுக் கேட்டதும், ஹெலிகாப்டருக்கு ஃபோன் மூலம் தகவல் அளித்ததையும் போராளிகளும் கேட்டுள்ளனர்.ஐந்து நிமிட வித்தியாசத்தில் தாக்குதல் திட்டத்தை முறியடித்ததாகவும், பிரதமரின் பயணம் தொடர்ந்திருந்தால் தாக்குதல் நடந்திருக்கும் எனவும் ராணுவச் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
காந்தஹாரில் பிரிட்டீஷ் ஆக்கிரமிப்பு ராணுவம் நிர்மாணித்த விவசாய கல்விநிலையத்தை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியிலும், ராணுவத்தினருடன் கலந்துரையாடவும் காமரூன் காந்தஹாருக்கு செல்லவிருந்தார்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment