ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே உள்ள நாடுகளிலிருந்து வேலைக்காக பிரிட்டனுக்குள் வரும் குடியேறிகளின் மொத்த எண்ணிக்கை குறித்த உச்ச வரம்பை பிரி்ட்டிஷ் அரசு வெளியிட்டுள்ளது.
வரும் ஜூலை மாதம் முதல் அடுத்த ஏப்ரல் வரையான காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத நாடுகளிலிருந்து வெறும் 24 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பப்ட்டுள்ளது.
பிரிட்டனின் உள்துறை அமைச்சரால் இந்த திட்டம் எதி்ர்வரும் திங்களன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
ஐக்கிய இராச்சியத்திற்குள் 2008 ஆம் ஆண்டில் வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒருலட்சத்து அறுபத்து மூவாயிரமாக இருந்தது. இதை மூன்றில் இரண்டு பங்காக குறைக்க புதிய அரசு விரும்புகிறது.
வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க கடுமையான சட்டத்தை ஏப்ரலில் கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
குடியேறுவோர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியாவே இந்த முடிவு பார்க்கப்படுகின்றது.
வர்த்தக நிறுவனங்களும், பொதுச் சுகாதாரத் துறையைச் சார்ந்தவர்களும் இந்த கொள்கை குறித்து ஐயம் வெளியிட்டுள்ளனர்.
இந்த மாதத் துவக்கத்தில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக, ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதார சேவைகள் துறை இந்தியாவில் இருந்து மருத்துவர்களை பணியில் அமர்த்த துவங்கியுள்ளது,
அதேநேரம் குடிவரவு சம்மந்தமான விதிகள் கடுமையாக்கப்பட்டதன் காரணமாக ஏற்கனவே பிரிட்டினில் பணிபுரியும் பல இந்திய டாக்டர்கள் தமது சொந்த நாட்டுக்கே திரும்பச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment