துபாய் : துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கம் 25.06.2010 வெள்ளிக்கிழமை மாலை இந்தியா கிளப்பின் தர்பார் ஹாலில் பேபர் கேஸ்ல் ஆதரவில் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி, குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்ற வினாடி வினா நிகழ்ச்சி மற்றும் கம்பஸ் பைனான்ஷியல் சொலுஷன்ஸ் ஆதரவில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகியவற்றை நடத்தியது.
துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கச் செயலாளர் காயத்ரி சந்திரசேகர் துவக்கவுரை நிகழ்த்தினார். தமிழ்த்தாய் வாழ்த்தினை ஆசிஷ் மலர்வன்னண், சந்தியா கீர்த்திவாசன், சஞ்சித் ராம்நாத் ஆகியோர் பாடினர்.
துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத் தலைவி மீனாகுமாரி பத்மநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். பேபர் கேஸ்ல் ஆதரவில் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது. இப்போட்டி இயற்கையை பாதுகாக்கும் விதத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் 4 முதல் 6 வயது வரை ஒரு பிரிவாகவும், 7 முதல் 8 வயது, 9 முதல் 10 வயது, 11 முதல் 13 வயது வரை ஆகிய நான்கு பிரிவாக உஷாகிருஷ்ணன்,ராதா தியாகராஜன், வாலண்டியர்ஸ் இந்து பத்மநாதன், தனுஜா காந்தி மேற்பார்வையில் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசினை ஸ்பான்சர் பேபர் கேஸ்ல் அதிகாரிகள் எம்.வி. நாயர், ஜெனரல் மேனேஜர் மற்றும் சேகர் ஆகியோர் வழங்கினர். அவர்களுக்கு மீனாகுமாரி பத்மநாதன், ஹேமமாலினி சுந்தர் ஆகியோர் நினைவுப் பரிசினை வழங்கினர்.
பொழுது போக்குத்துறை செயலாளர் சாரதா ஹரி ஸ்பான்சர் கம்பஸ் பைனான்ஷியல் சொலுஷன்ஸ் நிறுவனம் குறித்து அறிமுகம் செய்தார். அல் வாஸல் மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் டாக்டர் பர்வீன் பானு மற்றும் குளோரி சேவியர் ஆகியோர் மருத்துவ விழிப்புணர்வு உரை நிகழ்த்தினர். டாக்டர் பர்வீன் பானு மற்றும் குளோரி சேவியர் ஆகியோருக்கு ராதா தியாகராஜன் மற்றும் காயத்ரி சந்திரசேகர் ஆகியோர் நினைவுப் பரிசினை வழங்கினர். குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்ற வினாடி வினாப் போட்டி மாஸ்டர் ப்ரணவ் தியாகராஜனால் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாஸ்டர் ப்ரணவ் தியாகராஜனுக்கு சாரதா ஹரி நினைவுப் பரிசினை வழங்கினார். ஸ்பான்சர் கம்பஸ் பைனான்ஷியல் சொலுஷன்ஸ் நிறுவனம் எல்லா உறுப்பினர்களுக்கும் நினைவுப் பரிசினை வழங்கினர்.
குரல் சொல்லும் நேரத்தில் ஆஷிஷ் மலர்வண்ணன், சந்தியா கீர்த்திவாசன், சஞ்சித் ராம்நாத் மற்றும் ரிஷாப் ராம்நாத் ஆகியோர் திருக்குறளும் அதன் விளக்கமும் கூறினர்.
செயலாளர் காயத்ரி சந்திரசேகர் நன்றியுரை நிகழ்த்தினார். தமிழ்ப் பெண்கள் சங்க அங்கத்தினர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Home
Uncategories
துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கம் நடத்திய மருத்துவ நிகழ்ச்சி மற்றும் ஒவியப் போட்டி!
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment