மும்பை:வக்கீல் பர்ஹானா ஷாவின் கசாபுடனான சந்திப்பிற்கு பிறகு, அவரின் குடும்பத்தாரின் மருத்துவமனை சில மர்ம நபர்களால் தாக்குதலுக்குள்ளானது.
"சில அடையாளம் தெரியாத நபர்கள் என் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். என் அலுவலகம் மூடிக்கிடக்கவே,அருகிலுள்ள என் குடும்பத்தினரின் மருத்துவமனயை சூரையாடியுள்ளனர்" என்று பர்ஹானா தெரிவித்தார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு வக்கீலான முபீன் ஷோல்கருக்கும் சில மர்ம நபர்களிடமிருந்து கொலை மிரட்டல்கள் தொடர்ந்து வந்தவண்ணமுள்ளது. முபீன் ஷோல்கர் மற்றும் பர்ஹானா ஷா ஆகிய மூத்த வக்கீல்களை மும்பை நீதிமன்றம் கடந்த வாரம் கசாபிற்காக வாதாடும்படி கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இருவரும் கசாப் இருக்கும் சிறைக்கு சென்று சுமார் 20 நிமிடங்கள் பேச்சு நடத்தினர்.இச்சந்திப்பிற்கு பிறகு முபீன் பேட்டியளித்ததாவது கசாபை தனிமை வாட்டியுள்ளதாகவும், அவன் மற்ற கைதிகளுடன் சேர்ந்து வாழ விருப்பபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தன் தலையை கீழே தாழ்த்திய வண்ணம் தங்களிடம் கசாப் உரையாடியதாக முபீன் கூறினார். இன்னும் எவ்வளவு வருடம் என் வழக்குத் தொடரும், என் வழக்கு எப்போது முடியவரும்? என்று ஆதங்கத்துடன் கசாப் தெரிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
source:MumbaiMirror, DNA
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment