சமீபத்தில் மங்களூரில் விமான நிலையத்திலேயே விபத்து ஏற்ப்பட்டதால் அது விபத்து எனும் பட்டியலில் வந்தது. மாறாக, விமானம் தரையிறங்கும் முன்பாகவே விபத்து ஏற்ப்பட்டிருந்தால் அதையும் முஸ்லிம் தீவிரவாதிகளின் சதி எனும் பட்டியலில் சேர்த்திருப்பார்கள்.
ஏனெனில் இந்தியாவில் எங்கு குண்டு வெடிப்புகள் நடந்தாலும் “முஸ்லிம் தீவிரவாதிகளின் சதி” என்றுதான் இத்தனை காலமாக பத்திரிக்கைகளும், காவல்துறையும் கூறிவந்துள்ளன. ஆனால் விசாரணை நடத்தப்பட்ட வழக்குகள் அனைத்திலும் இந்தியாவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் பெரும்பகுதி இந்துத்துவ தீவிரவாதிகளால் தான் நடத்தப்பட்டன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
எங்கு குண்டு வெடிப்புகள் நடந்தாலும் “முஸ்லிம் தீவிரவாதிகளின் சதி” என ஆர்வமாக தலைப்பிட்டு அதற்கேற்ப கதை, வசனம் எழுதி பிரசுரிக்கும் பத்திரிக்கைகள், விசாரணையில் நிரூபிக்கப்பட்ட உண்மைகளை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்கின்றன.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக “அஜ்மீர் குண்டுவெடிப்பு - இந்து தீவிரவாதி கைது” என்று தினத்தந்தி பெட்டிசெய்தி வெளியிட்டதை நம்பவே முடியவில்லை. இந்த ஆச்சிரியம் அகலுவதர்க்குமுன் ஹைதராபாத் அஜ்மீர் குண்டு வெடிப்புகளுக்கு இந்துத்துவ தீவிரவாதிகள்தான் காரணம் என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி மேலும் ஆச்சரியப்பட வைத்தார்.
CNN, IBN சேனல்களுக்கு வழங்கிய பேட்டியில்தான் சிதம்பரம் இவ்வாறு குறிப்பிட்டார். அபினவ் பாரத் எனும் இந்துத்துவ அமைப்பு ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் வெடிகுண்டு வைத்து 16 பேரை கொன்றது , அஜ்மீர் தர்காவில் வெடிகுண்டுகள் வைத்து 3 பேரை கொன்றது. இவை இரண்டிற்குமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் நடத்தப்பட்ட பிற குண்டுவெடிப்புகளை செய்ததும் இந்துத்துவ அமைப்புகள் தானே என்று பத்திரிக்கையாளர் கேட்டதற்கு “உள்துறை அமைச்சரின் நாற்காலியிலிருந்து அதை நான் சொல்ல முடியாது. சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பை உதாரணமாக கூறலாம், தெளிவான ஆதாரங்கள் கிடைக்கும்வரை அதை செய்தவர்களும் இந்துத்துவ தீவிரவாதிகள்தான் என்று என்னால் கூற முடியாது” என்றார்.
ஆனால் 64 பேர் கொல்லப்படவும், 50 க்கு மேற்பட்டோருக்கு காயம் ஏற்படவும் காரணமாக இருந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது இந்துத்துவ தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத் என்று C.B.I அதிகாரி அஸ்வினி குமார் தெரிவித்துள்ளார்.
இதை உறுதிசெய்ய அஜ்மீர் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட அபினவ் பாரத் அங்கத்தினர்களான தேவேந்திர குப்தா, சந்திரசேகர் பாட்டிதர் ஆகியோரை C.B.I அதிகாரிகளும் ஹரியானா பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் விசாரணை நடத்தியதாக அஸ்வினி குமார் குறிப்பிட்டார்.
அஜ்மீர் தர்கா, மக்கா மஸ்ஜித் போன்ற இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் உபயோகப்படுத்தப்பட்ட வெடிப்பொருட்கள்தான் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிலும் பயபடுத்தப்பட்டுள்ளதாக தடவியல் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் அவை மத்திய பிரதேசம் இந்தூரிலிருந்து கொண்டுவரப்பட்டதாகவும் C.B.I. கண்டறிந்துள்ளது.
அபினவ் பாரத அமைப்பை சார்ந்த லோகேஷ் ஷர்மா அஜ்மீர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் எனக்கூறி ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். அஜ்மீர் குண்டுவெடிப்பில் முதலில் கைது செய்யப்பட்ட தேவேந்திர குப்தாவுக்கும் இந்துத்துவா தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத்திற்கும் தொடர்பு இருப்பதாக ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
R.S.S.இன் முன்னாள் பிரச்சாரகரும் மத்திய பிரதேஷ் அபினவ் பாரத் அங்கத்தினருமான சுஷில் ஜோஷி, அஜ்மீர் குண்டுவெடிப்பின் காரணகர்த்தா என்று A.T.S. ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது. அஜ்மீர் குண்டுவெடிப்பில் டைமராக பயன்படுத்திய மொபைல் சிம் கார்டில் இருந்துதான் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பிர்க்கான துப்பு கிடைத்தது.
அஜ்மீரிலும், ஹைதராபாத்திலும் வெடிக்காத குண்டுகளை பரிசோதித்தபோது அவற்றில் டைமராக உபயோகப்படுத்திய மொபைல் சிம் கார்டுகள் ஒரே மாதிரியானவை என்றும், ஜார்ர்கண்ட்டில் ராஞ்சியில் உருவாக்கப்பட்ட இவை போலியானவை என்றும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டவை.
அடுத்ததாக கோவா குண்டுவெடிப்பை நிகழ்த்தியது சனதன் சனஸ்தா தீவிரவாத அமைப்பு தான் என்பது கண்டறியப்பட்டு அதன் அங்கத்தினர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவா குண்டுவெடிப்பில் தேசிய விசாரணை குழு 11 பேருக்கு குற்றப்பத்திறிக்கை தாக்கல் செய்துள்ளது.
R.S.S.இன் ஒரு பிரிவான சனதன் சனஸ்தா அமைப்பை சார்ந்த இவர்களுக்கு எதிராக 3000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திறிக்கையை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. 11 பேரில் நால்வர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் தலைமறைவாக இருக்கின்றனர். மீதி இரண்டு பேர் வெடிகுண்டுகளை பொருத்திக் கொண்டிருக்கும்போதே அவை வெடித்ததால் பலியாகிவிட்டனர்.
இவ்வாறு இந்தியாவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் பெரும்பாலும் இந்துத்துவ தீவிரவாதிகளால்தான் நடத்தப்பட்டுள்ளன என்று திட்டவட்டமான அறிந்த பின்னரும் R.S.S. மற்றும் அவை சார்ந்த அமைப்புகளை தடை செய்யாமல் அரசு மௌனம் காக்கின்றது.
முஸ்லிம் தீவிரவாதிகளின் சதி எனும் தலைப்பிற்கு பதிலாக இந்து தீவிரவாதிகள் கைது, நக்சல்களின் சதி என பத்திரிக்கைகளில் தலைப்புகள் இனி தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். இது முஸ்லிம்களுக்கு சற்று ஆறுதலான செய்தி.
Source : உணர்வு (JUNE 04 – 10, 2010)
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment