ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு இந்தியாவிலும், துபாயிலும் வேலை தரப்போவதாக தேசிய விமான கம்பெனி இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அரவிந்த் ஜாதவ் கூறினார்.
இந்த கம்பெனிதான் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸை இயக்கி வருகிறது.
"விபத்துக்கு முன்னால் அந்தக் குடும்பங்கள் என்ன நிலையிலிருந்ததோ அதே நிலைக்குத் திரும்பக் கொண்டுவர நாங்கள் முயற்சி செய்கிறோம்.
பாதிக்கப்பட்ட அனைவரும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவர். அவர்கள் வாழ்வாதாரங்கள் பாதுக்காப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை கொடுப்பதற்கு ஆர்வமாக உள்ள கம்பெனிகளை ஏர் இந்தியா தொடர்பு கொண்டு வருகிறது. அத்தோடு ஏர் இந்தியாவிலும் வேலை தருவதற்கு பரிசீலித்து வருகிறோம்." என்று அவர் கூறினார்.
இவ்விமான விபத்தில் பயணம் செய்த 166 நபர்களில் 159 நபர்கள் உயிரிழந்தனர்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment