உலக வங்கியிடம் அதிக கடன் பெற்ற நாடுகள் பட்டியலில் - இந்தியாவுக்கு முதலிடம்!


நடப்பு நிதியாண்டில் உலக வங்கியிடம் அதிக கடன் தொகை வாங்கிய நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்திருக்கிறது.
கடந்த 2009 ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், இந்தியாவுக்கு உலக வங்கி 2.2 பில்லியன் டொலர்களை கடனாக வழங்கிருந்தது. ஆனால், 2010, ஜூன் 20 ம் திகதி வரை இந்தியாவுக்கு உலக வங்கி கொடுத்துள்ள மொத்த கடன் தொகை 9.26 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்! இது கடந்த முறையை விட 15 சத வீத அதிகரிப்பு!

உலக வங்கி கொடுத்துள்ள மொத்த கடன் தொகையில் 15 சத வீதம் இந்தியா தான் பெற்றுள்ளது. அடுத்த இடத்தில் மெக்சிக்கோவும், மூன்றாமிடத்தில் தென்னாபிரிக்காவும் உள்ளன. வருகிற நிதியாண்டிலும் இந்தியாவுக்கு உலக வங்கி கொடுக்கவுள்ள நிதியுதவி 0.04 பில்லியன் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

உலக வங்கியிடமிருந்து இந்தியாவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள கடன் தொகை பற்றியும், எவற்றிற்கான பயன்பாடு என்பது பற்றியும் உலகவங்கியின் இந்திய இயக்குனர் ரொபேர்ட் சாகா எடுத்துரைக்கிறார்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: