பிற்படுத்தப்பட்ட மிக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!

கடலூர்: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசின் உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் பிற்படுத்தப்பட் ட, மிகவும் பிற் படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மருத்துவம், சட்டம், பொறியியல்,வேளாண்மை மற்றும் கால்நடை மருத்துவம் போன்ற பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ- மாணவிகளின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமலும், குடும்பத்தில் எவரும் பட்டதாரி இல்லை என்ற நிபந்தனைகளுக்குட்பட்டு இலவச கல்வி திட்டத்தின் கீழ் படிப்புக்கட்டணம், தேர்வுக்கட்டணம் மற்றும் இதர திரும்பப் பெற இயலாத கட்டணங்கள் வழங்கப்படுகிறது.

மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் குகள் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கீடு பெற்று பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மட்டும் இதே நிபந்தனை களுக்குட்பட்டு கல்வி உதவித்தொகைகள் வழங்கப் படுகின்றன. இதேபோல் பட்டயப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்புகள் போன்ற இதர படிப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருப்பின் பள்ளி மேற் படிப்பு திட்டங்களின் கீழ் உதவித்தொகைகள் அறிவிக்கையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளவாறு வழங்கப்படுகின்றன.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிடமிருந்து இலவசமாக பெற்று உரிய சான்றுகளுடன் புதுப்பித்தல் உதவித்தொகைகளை பொருத்தவரை 31.7.2010-க்குள்ளும், புதிய உதவித்தொகைகள் 31.8.2010-க்குள்ளும் கல்வி நிறுவனங்களுக்கு சமர்ப்பிக் கப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலுள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் தெரிவித்து உள்ளார்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: