ஹமாஸ் தலைவர் மஹ்மூத் அல் மப்ஹூஹ் கொலைக்கு உதவியாக இருந்த ஒரு மொஸாத் ஏஜண்ட் போலந்து தலைநகர் வார்ஸாவில் கைது செய்யப்பட்டான்.
'ஒரு ஜெர்மன் பாஸ்போர்ட்டை வாங்குவதில் இவன் ஈடுபட்டிருக்கிறான்' என்று ஜெர்மன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தச் செய்தி 'டெர் ஸ்பீஜெல்' என்றே ஜெர்மன் பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது.
'அவனை ஜெர்மனியின் வசம் ஒப்படைப்பார்களா என்பது போலந்தைப் பொறுத்தது' என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த ஜனவரியில் நடந்த மப்ஹூஹ் கொலையில் கைது செய்யப்பட்டுள்ள முதல் குற்றவாளி இவன்தான். இவனது பெயர் உரி ப்ராட்ஸ்கி (Uri Brodsky)
இவன் இந்த மாதம் முதல் வாரத்திலேயே கைது செய்யப்பட்டு விட்டானாம். வார்ஸா விமான நிலையத்தில் இவனைக் கைது செய்துள்ளனர். இவன் மப்ஹூஹைக் கொலை செய்ய வந்த கொலைகாரர்களில் ஒருவனுக்கு கள்ள பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்துள்ளான்.
கடந்த ஜனவரி 20ம் தேதி துபாயிலுள்ள அல்-புஸ்தான் ரொடானா ஹோட்டலில் ஓர் அறையில் வைத்து ஹமாஸ் தலைவர் மப்ஹூஹ் மருந்தடித்து, மூச்சுத் திணறடிக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
இக்கொலையை செய்தது இஸ்ரேலின் மொஸாத் என துபாய் போலீஸ் குற்றம் சாட்டியது. ஆனால் இக்குற்றச்சாட்டை இஸ்ரேல் மறுத்து வந்தது.
இந்நிலையில் இக்கொலைத் தொடர்பாக ஒரு மொஸாத் ஏஜண்ட் கைது செய்யப்பட்டிருப்பது, இக்கொலையைச் செய்தது மொஸாது தான் என்பது உறுதியாக தெரியவந்துள்ளது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment