இஸ்லாமாபாத்:பாகிஸ்தானை அழிக்க,அதற்காக உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த கராச்சி நகரில் திட்டமிட்ட படுகொலைகளை நிகழ்த்தி வரும் வெளிநாட்டு சக்திகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதற்கு போதுமான ஆதாரமும் நம்மிடம் உள்ளன என பாக் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு அளித்துள்ள பதிலில் இந்த வெளிநாட்டு சக்திகளுக்கு உள்நாட்டில் இருந்து செயல்படக்கூடிய ஒரு சில சக்திகளும் உதவி புரிந்து வருகின்றன என தெரிவித்துள்ளார்.எங்கெல்லாம் உள்நாட்டு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கபடுகின்றதோ சட்ட ஒழுங்கு சீர்கெடுகின்றதோ அரசு எந்திரம் முடக்கபடுகின்றதோ அங்கெல்லாம் அரசு இரும்புக்கரம் கொண்டு பயங்கரவாத சக்திகளை ஒடுக்கிடும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த வன்முறை சம்பவத்தில் ஷியாக்களோ சன்னிக்களோ ஈடுபடவில்லை மாறாக வெளிநாட்டு நிதி உதவியுடன் செயல்படும் மூன்றாவது சக்திதான் இப்பிரிவினை வாத சதிச் செயலை செயல்படுத்துகின்றது. இவர்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம் என ஆன்லைன் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
Home
Uncategories
பாகிஸ்தானை அழிக்க அந்நிய சக்திகள் சதி கண்டுபிடிக்கபட்டுள்ளது: பாக் உள்துறை அமைச்சர் தகவல்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment