பயங்கரவாதத்தை ஒழிப்பதில் ஒத்துழைப்பு: சார்க் உள்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தும்

First Published : 22 Jun 2010 12:00:00 AM IST

Last Updated :


புது தில்லி, ஜூன் 21: இஸ்லாமாபாத்தில் ஜூன் 26-ம் தேதி நடைபெறவுள்ள சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் சார்க் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு ஏற்பட வேண்டியதன் அவசியத்தை இந்தியா வலியுறுத்தும். சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாடு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஜூன் 26-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கலந்து கொள்கிறார். பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் சார்க் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு, கடல் பாதுகாப்பு, உறுப்பு நாடுகளுக்கு இடையே காவல்துறை ஒத்துழைப்பு, போதை பொருள் கடத்தல் தடுப்பு போன்ற விஷயங்கள் பற்றி இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளன.

இந்த மாநாட்டில் சார்க் உறுப்பு நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், பூடான், மாலத்தீவு, வங்க தேசம், இலங்கை ஆகிய நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
Share on Google Plus

About http://tamiliic.blogspot.com/

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments: