தென் மேற்குப் பருவ மழை கேரளாவில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கேரளாவையொட்டியுள்ள நெல்லை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
சாலைகள் அனைத்தும் வெள்ளக் காடாகக் காட்சி அளிக்கிறது. பலத்த சூறாவளி காற்றும் வீசிக் கொண்டிருக்கிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் எழுந்துள்ளது.
தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியவில்லை. அதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment