லக்னோ: உத்தரபிரதேசத் தலைநகர் லக்னோவில் இருந்து 250 மைல் தூரத்துல் உள்ள பாலியா என்ற இடத்தில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்தவர்களில் சுமார் 40 பேர் நீரில் மூழ்கி பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கோவில் திருவிழாவிற்காக 30 பேர் செல்லக்கூடிய படகில் 70 பேர் சென்றுள்ளனர். இதனால் எடை தாங்க முடியாமல் படகு கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மீட்பு பணியில் பல படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதுவரை 12 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. படகில் விதியை மீறி அதிகம் பேர் பயணம் செய்ததே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment