ஆற்றங்கரை முட்புதரில் ஆண்குழந்தை வீச்சு
நெல்லை: நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள முட்புதரில் பிறந்து சில மணி நேரமே ஆன அழகான ஆண்குழந்தை போர்வையில் சுற்றப்பட்டு கிடந்தது. ஆற்றில் குளிக்க சென்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த இருவர் குழந்தையை மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.
நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் அஸ்ரப் அலி, ஜமால். இருவரும் தொண்டு நிறுவனம் நடத்தி வருகின்றனர். இவர்களது அலுவலகம் கைசாலபுரம் தைக்கா தெருவில் உள்ளது.
நேற்று காலை இருவரும் குளிப்பதற்காக தாமிபரபரணி ஆற்றிக்கு சென்றனர். அப்போது அங்குள்ள முட்புதரில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. சத்தம் வந்த இடத்திற்கு இருவரும் சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரமே ஆன அழகான ஆண்குழந்தை போர்வையில் சுற்றப்பட்டு கிடந்தது. அதன் தொப்புள் கொடியில் கிளிப் மாட்டப்பட்டிருந்தது.
இருவரும் அந்த குழந்தையை தூக்கி கொண்டு கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நெல்லையில் உள்ள சரணாலயத்தில் குழந்தை ஓப்படைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment