குளச்சல்: சிறுமிகளிடம் செக்ஸ் டார்ச்சர் செய்வதாக எழுந்த புகாரை அடுத்து குளச்சல் அருகே முறையான அனுமதியின்றி நடத்தப்பட்ட இரண்டு காப்பகங்களில் அதிரடி ரெய்டு நடந்தது.
குளச்சல் அருகே உள்ள கல்லுகூட்டத்தில் கடந்த சில வருடங்களாக மூன்று குழந்தைகள் காப்பகங்கள் செயல்பட்டு வந்தன. ஒரு சில பிரச்சனைகள் காரணமாக ஒரு காப்பகம் சுமார் ஒரு வருடங்களுக்கு முன்பு இங்கிருந்து களக்காடு பகுதிக்கு மாற்றப்பட்டு அங்கு இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மணவாளக்குறிச்சி அருகே உள்ள படர்நிலத்தை சேர்ந்த மேரி என்பவர் குளச்சல் இன்ஸ்பெக்டரிடம் கடந்த 24ம் தேதி ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தனது கணவர் செல்வம் இறந்து விட்டதாகவும், அவரது இரண்டு மகள்கான ஜெபசபீனா, ஜெயரபீனா ஆகியோர் கல்லுகூட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்கி படித்து வருவதாகவும், அந்த காப்பதத்தை நிர்வாகித்து வரும் ஞானதாஸ் என்பவர் தனது மகள்களை செக்ஸ் டார்ச்சர் செய்வதாகவும் அவர்களை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்றால் அதற்கு அனுமதி மறுத்து விட்டதாகவும் மகள்களை காப்பகத்தில் இருந்து மீட்டு தரும்படியும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து அன்று இரவே இன்ஸ்பெக்டர் கந்தகுமார், சம்பந்தப்பட்ட காப்பகத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்பு மேரியின் இரண்டு குழந்தைகளையும் மீட்டு மேரியிடம் ஓப்படைக்கப்பட்டனர். மேலும் நேற்று முன்தினம் அந்த காப்பகத்தில் தங்கியிருந்த மொத்தம் 11 குழந்தைகளிடமும் தனி தனியாக விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்த காப்பகம் குறித்து ஒருவர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து மனித உரிமை மீறல் மற்றும் பெண் குழந்தைகள் பலத்கார தடுப்பு பிரிவு ஏடிஜிபி அர்ச்சனா ராமசுந்தரம் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் ஏட்டுகள் நெல்சன், முருகேசன், உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கல்லுகூட்டம் குழந்தைகள் காப்பகத்தில் அதிரடி ரெய்டு நடத்தினர்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment