ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆதரவளிக்க முன்வந்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக மிக முக்கிய முடிவுகள் எடுக்கும் அமைப்பாக பாதுகாப்பு சபை உள்ளது. தற்போது இதில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. மேலும் 10 நாடுகள் சுழற்சி அடிப்படையில் உறுப்பினராக இருக்கும். பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கேட்டு இந்தியா சர்வதேச அளவில் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்தியாவின் இந்த முயற்சிக்கு வெளிப்படையாக எதிர்ப்பு எதுவும் வெளிப்படவில்லை. எனினும் மறைமுகமான அழுத்தங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கனடாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் இந்தியாவின் வியூகத்திற்கு வெளிப்படையான ஆதரவு கிட்டியுள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பின் பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் செய்தியாளர்களிடம் பேசும் போது இந்தியாவின் கோரிக்கைக்கு பிரிட்டனின் ஆதரவு உண்டு என தெரிவித்தார்.
இந்தியாவின் முயற்சிக்கு தங்களின் முழு ஆதரவு உண்டு என பிரான்ஸ் அதிபர் நிகலஸ் சர்கோசியும் தெரிவித்திருக்கிறார்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment