இலங்கைப் பணிப் பெண் ஒருவரைக் கொடுமைப்படுத்தினார் என்கிற வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டிருக்கும் லெபனானிய எஜமானி ஒருவருக்கு லெபனான் நீதிமன்றம் ஒன்று ஒரு மாத கால சிறைத் தண்டனையும்,6600அமெரிக்க டொலர் அபராதமும் வழங்கி நேற்று தீர்ப்பளித்தது.
அத்துடன் இக்குற்றவாளி 05 வருடங்களுக்கு பணிப் பெண்களை வேலைக்கு நியமிக்க முடியாது என்றும் தடை பிறப்பித்துள்ளது. இக்குற்றச் செயல் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கும் 2007 ஆம் ஆண்டு மே மாதத்துக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றிருக்கிறது. இந்த இலங்கைப் பணிப் பெண்ணை வீட்டை விட்டு வெளியேறிச் செல்ல முடியாதபடி குறித்த எஜமானி அடைத்து வைத்திருக்கின்றார்.
ஆயினும் பணிப் பெண் ஒருவாறு தப்பிச் சென்று அந்நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் சரண் அடைந்திருக்கிறார். தூதரகத்தின் ஆலோசனை,வழிகாட்டல் ஆகியவற்றின்படி கரித்தாஸ் என்கிற வெளிநாட்டுத் தொழிலாளர் ந்லன் பேணும் அமைப்பு மூலம் இவரின் சார்பில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எஜமானி தாக்கியமையால் இவரின் உடல் முழுவதும் அடிகாயங்கள் ஏற்பட்டிருக்கின்றமை மருத்துவ பரிசோதனைகள் மூலம் நீதிமன்றத்துக்கு உறுதிப்படுத்தப்பட்டது.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment