இலங்கை: மாத்தறையில் பிச்சைக்கார வேடத்தில் உளவுப் பார்த்துக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரை போலிஸார் கைது செய்தனர்.
ஈஸ்வரன் சந்திரகுமார்(35) என்ற அந்த நபர் விடுதலை புலிகளின் "சார்ள்ஸ் அன்ரனி" என்ற படைப் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். சில தினங்களுக்கு முன் மேலும் ஒரு புலி உறுப்பினர் மாத்தறையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகளை உளவு பார்க்கும் நோக்கில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மாத்தறைக்கு வந்திருக்கலாம் எனவும், கைது செய்யப்பட்ட அந்நபர் ஜனாதிபதி மற்றும் அரசியல் முக்கியஸ்தர்களின் பயணங்கள் தொடர்பான உளவுப் பணியில் ஈடுப்பட்டிருந்தார் எனவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் ஒரு காலை இழந்துள்ளதாகவும், அரசுக்கும் புலிகளுக்கும் நடைப்பெற்ற கடைசி கட்ட யுத்ததின் போது அவர் கால்களை இழந்திருக்கலாம் எனவும் போலிஸ் தரப்பினர் கூறுகின்றனர்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment