கோலாலம்பூர்: போலீஸ் காவலில் இறந்தவரின் மனைவிக்கு ரூ. 2 கோடி நஷ்ட ஈடு தர மலேசிய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சுஷானா முகமது ஆரீஸ் (43) என்பவர் மலேசிய தலைநகரான கோலாம்பூரை சேர்ந்தவர். போலீசார் இவர் கணவரை கடந்த 1999-ம் ஆண்டு விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்றுள்ளனர். பிறகு 9 நாட்கள் கழித்து அவர் போலீஸ் காவலில் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சுஷானா மலேசியா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், போலீசார் தன் கணவரை விசாரணைக்காக அழைத்து சென்று அடித்து கொன்றுவிட்டதாக கூறியிருந்தார்.
இந்த வழக்கில், சுஷானா முகமது ஆரீசுக்கு ரூ.2 கோடி நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Home
Uncategories
போலீஸ் காவலில் இறந்தவரின் மனைவிக்கு ரூ.2 கோடி நஷ்ட ஈடு: கோலாலம்பூர் கோர்ட் உத்தரவு
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment